Home
National Midlath
தேசிய மீலாத் போட்டி 2017
தேசிய மீலாத் போட்டி 2017 பங்குபற்றிய எமது பாடசாலை (மட்-மம-ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம்) மாணவி ஜஃபர் ஜூமைனா ஹனி என்ற தரம் 4ல் கற்கும் மாணவி கனிஷ்ட பிரிவு பேச்சு போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றாா். அண்மையில் யாழ்பாணத்தில் நடாத்த தேசிய மீலாத் விழா வைபவத்தில் மாணவிக்கான சான்றிதழ் கௌரவ சபாநாயகர் அவா்களால் வழங்கி வைக்கப்பட்டது.
Science Exibition
மட்/மம/வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 2016.11.03ம் திகதி தரம் 6,9,10 மாணவிகளால் விஞ்ஞானக் கண்காட்சி நடாத்தப்பட்டது .
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற ஆசிரியை பரீதா அவா்கள் கலந்து சிறப்பித்தாா். மேலும் சில காட்சிகள் கலை காட்சி கூடத்தில் (Photos Gallery) காணலாம்
.
மனையியல் பாட செயன்முறை பயிற்சி
11.07.2017 அன்று எமது பாடசாலையில் மனையியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கும், கற்கும் மாணவிகளுக்கான விசேட செயன்முறை வகுப்பொன்று அஸார்டீன் புரூட் சொப்பின் (Asardeen Fruit shop) அனுசரணையில் ஏ.வி. செல்டன் (முஹம்மட்) சமையலாளர் கலாபூசணம் அவர்களினால் பல்வேறு விதமான உணவு அலங்கார முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
பல்வேறு காய்கறிகள், பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அலங்கார உணவு வகைளை அதிபர் MTM. Fareed அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும், அதிபரினால் சமையலாளர் (chef) அவர்களுக்கு விசேட நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன். அலங்கார உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.